தமிழகம் முழுவதும் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்தது. மே 10–ந்தேதிக்குள் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழகம் முழுவதும் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்தது. மே 10–ந்தேதிக்குள் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வுகள் கடந்த மாதம் 1–ந்தேதி தொடங்கி 27–ந்தேதி முடிந்தது. மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ, மாணவிகள் பிளஸ்–2 தேர்வினை எழுதினார்கள். இது தவிர தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 786 பேர் தேர்வு எழுதியுள்ளனர். மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 66 மையங்களில் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது. பெரும்பாலான மாவட்டங்களில் நேற்றுடன் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து விட்டது. அனைத்து மாவட்டங்களிலும் இதுவரை திருத்தி முடிக்கப்பட்ட பிளஸ்–2 விடைத்தாள்களின் மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்கள் அந்தந்த மையங்களில் இருந்து சி.டி.க்களில் பதிவு செய்யப்பட்டு தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. எல்லா தேர்வு மையங்களில் இருந்தும் விடைத்தாள் திருத்தி முடிக்கப்பட்ட மதிப்பெண்கள் விவரம் அடங்கிய சி.டி.க்கள் சென்னையில் உள்ள தேர்வுத்துறைக்கு வந்தபிறகு டம்மி எண்கள் நீக்கப்பட்டு, மாணவர்களின் உண்மையான பதிவு எண்கள்படி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கும். இந்த பணிகள் முடிவதற்கு 20 நாட்கள் ஆகும் என்பதால் மே 10–ந் தேதிக்குள் பிளஸ்–2 தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத்துறை முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்றுடன் முடிந்துவிட்டது. மதிப்பெண் பட்டியல் தயாரித்து முடிந்ததும் பிளஸ்–2 தேர்வு முடிவுகளை எப்போது வெளியிடலாம் என்று தேர்வுத்துறை தான் முடிவு செய்யும் என்றனர்.
No comments:
Post a Comment
We are always welcoming both positive and negative comments.