தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு அரசு இணையதளங்களில் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு அரசு இணையதளங்களில் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி அனுப்பியுள்ள கடிதத்தில், இதுவரை அரசு தேர்வுத் துறை ஆண்டு தோறும் நடத்தும் மேல்நிலை மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் அரசு இணையதளம் மூலமாகவும், தனியார் இணையதளங்கள் மூலமாகவும் வெளியிட்டு வந்தது. ஆனால், தற்போது அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் அடிப்படையில், அரசு இணையதளங்களில் மட்டும் தேர்வு முடிவுகளை வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தனியார் இணையதளங்களில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவது நிறுத்தப்பட்டுள்ளது.
THE WEBSITES WILL BE SOON ANNOUNCED BY THE GOVERNMENT
No comments:
Post a Comment
We are always welcoming both positive and negative comments.